புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள முக்கியப் பாசனக் குளமாய் விளங்கும் புதுக்குளம் கண்மாய்க் கரையில் தற்போது சாலை தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயத் தேவைகளுக்கும், கால்நடைகளை குளிப்பாட்டவும் குளத்திற்குள் பாதுகாப்பாக இறங்கிச் செல்ல படிக்கட்டு வசதியில்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, குளத்திற்குள் இறங்கிச் செல்ல ஏதுவாகப் படிக்கட்டுகள் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.