பக்கவாட்டுத்தளம் அமைக்கப்படுமா?

Update: 2026-06-21 14:21 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் காசாங்குளம் மேல்கரையில் பெருமாள் கோவில் வாசலில் சாலை மற்றும் குளத்தின் பக்கவாட்டுத்தளம் பழுதடைந்து வலுவிழந்து எந்த நேரமும் குளத்திற்குள் சரிந்து பெரும் விபத்து ஏற்படும் சூழல் தெரிகிறது.அந்த இடத்தில் மின் கம்பம் உள்ளது.பள்ளி,கோவில் அதிகம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் புதிய பக்கவாட்டுத்தளம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன்,பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்