பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவதோடு, அவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளைக் கடிக்கப் பாய்வதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களைத் துரத்துவதால் நிலைதடுமாறி விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களைப் பிடித்து கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.