சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.