மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதி சஞ்சீவி நகர் 3-வது தெரு மற்றும் குறுக்கு தெருவில் மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதால் அப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் ஆகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போதிய மின்னழுத்தம் இல்லாததால் வீட்டு உபயோக மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமமடைகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.