கூடங்குளம் ஊருக்கு கிழக்கில் தனியார் பள்ளி அருகில் சாலை வளைவில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் அழிந்து விட்டது. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடைகளில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசவும், அங்கு எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.