மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கடம்பன்குளம் கிராமத்தின் வடக்கு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 10 ஏக்கரில் உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். இதனை தடுத்து அங்கு பூங்கா அமைத்து பராமரிக்கவும், கடம்பன்குளத்தில் பொது சுகாதார வளாகவும் கட்டவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.