வீரவநல்லூர்- முக்கூடல் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சிலர் பழைய துணிகள், பிளாஸ்டிக் பைகள், குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் தாமிரபரணி ஆறு மாசடைகிறது. இந்த தண்ணீரை பருகும் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றில் குப்பைகளை வீசுகிறவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்