விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள் காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை துரத்துகின்றது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தையும் ஏற்படுத்தி செல்கின்றது. எனவே மேற்கண்ட பகுதியில் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?