பயணிகள் சிரமம்

Update: 2026-06-07 16:57 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் சிப்பிப்பாறை கிராமத்தில் பஸ் பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்க முன்பு அகற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை அங்கு புதிய நிழற்குடை அமைக்கப்படாததால் இங்கு வரும் பயணிகள், பொதுமக்கள் பஸ்சுக்காக வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்