விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. ஆனால் தற்போது வரை பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி பழைய பஸ் நிலையத்தை விரைந்து முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.