விழுப்புரம் நகரம் 15-வது வார்டு தக்கா தெருவில் உள்ள ஊரல் குட்டையில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. மேலும் குப்பைகளால் கடும் துர்நாற்றமும் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.