தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

Update: 2026-06-07 16:11 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பள்ளி சாலை, போலீஸ் நிலையம், நான்கு ரோடு, அரசு ஆஸ்பத்திரி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்