பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் பஸ் நிலையங்கள் மற்றும் சாலையோரங்களில் மணல் தேங்கி கிடக்கின்றன. தற்போது இப்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால், மணல் துகள்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மேல் விழுகிறது. வாகன ஓட்டிகளின் கண்களில் மண் விழுவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் தேங்கியுள்ள மணலை அகற்ற வேண்டும்.