பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து அரும்பாவூர் செல்லும் சாலையில் வெங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மேற்கு புறத்தில் சாலை ஓரத்தில் விவசாயக் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு சாலையின் வளைவு பகுதியில் இருப்பதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.