ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதகரித்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.