பராமரிக்கப்படாத கழிப்பிடம்

Update: 2026-06-07 09:08 GMT

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் பொது கழிப்பிடம் உள்ளது. ஆனால் இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தவே பொதுமக்கள் தயங்குகிறார்கள். இதன் காரணமாக திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ெதாடர்கிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்