கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியான கடைவீதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. கரடி, காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் ஒளிராததால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.