நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். இங்கு தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.