சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் பஞ்சாயத்தில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடாக காட்சி அளிப்பதுடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையும் சேதமடைகிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.