பொதுமக்கள் அச்சம்

Update: 2026-05-31 16:06 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இந்த தெருநாய்கள் காலை நேரங்களில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்களை துரத்தி கடிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து முன்வருமா?

மேலும் செய்திகள்