விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள புளியங்குளம் கண்மாய் மண் மேடேரி உள்ளதோடு ஆகாயத்தாமரை, செடிகள் கண்மாயினை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நீர்நிலைகளும் முற்றிலுமாக மாசடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கண்மாயை ஆக்கிரமித்து உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றவும் கண்மாயினை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.