தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பெரிய தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் எல்லாம் வெளியே தெரிகின்றன. எந்த நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளது. எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,பட்டுக்கோட்டை