கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகே பாரதி நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலைக்கு சென்று வருபவர்கள். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இப்பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும்.