பாலம் வசதி தேவை

Update: 2026-05-10 15:39 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தில் உள்ள மலட்டாற்று தரைப்பாலம் சேதமடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அங்கு போக்குவரத்து முற்றிலும் தடைபடுகிறது. எனவே கிராம மக்களின் நலன்கருதி அங்கு உயர்மட்டபாலம் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்