கிருஷ்ணகிரியில் முக்கிய சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் தெருக்களில் நாய்கள் தொல்லையால் குழந்தைகள் வீட்டின் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.