செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள காயரம்பேடு என்ற ஊரின் பெயர் பலகை தனியார் விளம்பர பலகை மூலம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடம் தெரியாமல் சுற்றிதிரியும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதுபோன்று பெயர் பலகையை மறைக்கும் வகையில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.