செங்கல்பட்டு மாவட்டம், பொலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது. இந்த கிணற்றை சுத்தம் செய்தால் பள்ளியில் உள்ள மாணவ-மாணவியர்கள் தேவைகளுக்கு பயன்படுத்தலாம். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.