திருவள்ளூர் மாவட்டம், திருவூர் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் புதிய குடியிருப்பு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் முழுமையடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதுகுறித்து, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த பகுதி மக்களின் நலன் கருதி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.