பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அமர முடியாமல் பஸ் வரும் வரை கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.