விவசாய நிலங்களில் மான்கள்

Update: 2026-05-10 11:10 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் வெண்பாவூர், கை.களத்தூர், அய்யனார்பாளையம், அன்னமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளது. இந்த காடுகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால், மான்கள் குடிப்பதற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன. எனவே வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்