புதிய சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும்

Update: 2026-05-03 16:53 GMT

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு மருத்துவமனையின் அருகில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் ஒருவர் பணியில் உள்ளார். இந்த அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்பில் செவிலியர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேகமாக காற்றடித்ததால் சுகாதார கட்டிடத்தின் அருகில் இருந்த மரம் சுற்றுச்சுவர் மீது விழுந்து சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. எனவே இடிந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்