சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் தூக்கமின்றி மிகவும் அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கொசுக்கள் தொல்லையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?