நடவடிக்கை தேவை

Update: 2026-05-03 16:13 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சில வாலிபர்கள் ஆபத்தை உணராமல் தங்கள் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாவதோடு, சாலையை கடக்க காத்து நிற்கும் பெண்களும், பள்ளி மாணவர்களும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்