சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டும்

Update: 2026-05-03 14:48 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீழாத்தூர், மேலாத்தூர், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் நெடுஞ்சாலை துறை மூலமாக, நிழல் தரும் வேம்பு, புளி, புங்கன், நாவல், அத்தி, வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் மீது ஒரு சில நபர்கள் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். இதனால் நிழல் தரும் சாலையோர மரங்கள் பட்டு விடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டும்.

மேலும் செய்திகள்