பயணிகள் அவதி

Update: 2026-05-03 14:14 GMT

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கை கரைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இப்பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு தினந்தோறும் பஸ்சில் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் இந்த பஸ் நிறுத்தம் வரும் பயணிகள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்