பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் இருந்து வசிஷ்டபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.