மருந்துகள் விலை குறைக்கப்படுமா?

Update: 2026-05-03 13:37 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் சில பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருந்தகங்களில் உயிர் காக்கும் மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் முதியவர்கள் உள்ளிட்ட மருத்துவ பயனாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு உரிய விலையில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்