பெரம்பலூர் வட்டம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பயன்படுத்தும் போது, வீணாகும் உபரிநீரானது முறையாக செல்ல வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளதால் அதன் அருகில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதற்குத விரைந்து தீர்வு காண வேண்டும் என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முறையான வடிகால் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.