முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு இரவில் பெரும்பாலும் டாக்டர் இல்லாததால் பொதுமக்கள் அவசர தேவைக்கு நெல்லைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உடடினயாக சிகிச்சை பெற பெறாமல் நோயாளிகள் உயிரிழக்கும் துயரநிலை உள்ளது. எனவே முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக இரவுநேர டாக்டரை நியமிக்கவும், 108 ஆம்புலன்சை தயாராக நிறுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.