திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள த.மங்கம்பட்டி புதூர் சமத்துவபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல இப்பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெயில் மற்றும் மழையில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிறுத்தத்தை தாண்டி சென்று பஸ்கள் நிற்பதால் இப்பகுதி பெண்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் நிழற்குடையுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.