விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கம்பிகள்

Update: 2026-04-26 17:27 GMT

திருப்பூர் நிட்மா சாலையில் இருந்து மணியக்காரம்பாளையம் செல்லும் நொய்யல் கரையோரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கனரக வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு தடுப்புகள் சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சிறிய அளவிலான கம்பி அமைக்கப்பட்டதால் வாகனங்கள் மோதியதில் உடைந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கம்பி உடைந்து கிடப்பது சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே உடைந்த இரும்பு கம்பியை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்