சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தூக்கமின்றி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கொசுத்தொல்லையால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.