பவானி ஆர்.என்.புதூர் அருகே உள்ள ராகவேந்திரா நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். அருகே உள்ள மங்களி நகர் பகுதியிலும் இதே பிரச்சினை நீடிக்கிறது. இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?