நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குழந்தைகள் மருத்துவ பிரிவுக்கு எதிரில் உள்ள சுகாதார வளாகம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. கழிப்பறைகளில் மதுபாட்டில்கள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கழிவுநீரும் வெளியேறாமல் தேங்குவதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. எனவே அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.