அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாகியுள்ளது. விவசாய நிலங்களில் விளைந்துள்ள பயிர்களை நாசம் செய்து வந்தன. இப்பொழுது வீடுகளுக்குள்ளும் புகுந்து உணவு பொருட்களை அள்ளிச் செல்வதோடு, அட்டகாசமும் செய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.