மதுரை சிம்மக்கல் வைகை ஆற்றில் தரைப்பாலம் தடுப்பணையில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் நீர்நிலை முற்றிலுமாக மாசடைவதுடன், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. எனவே இதுகுறித்து மாவட்ட நர்வாகம் மேற்கண்ட பகுதியில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை முற்றிலுமாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.