புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதி அருகே 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோழிப்பண்ணைக்கு சொந்தமான காலி இடத்தில் கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்து காணப்படுகிறது. இப்பகுதி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதனால், இப்பகுதியில் நாளுக்கு நாள் பாம்பு தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் இவை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை தீண்ட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.