புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் நகர், கம்பன் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதிகளில் கொசு மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.