திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் தினமும் ஏராளமான பயணிகள் நின்று பல்வேறு ஊர்களுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்படாமல் உள்ளதால், பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.